நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி:  தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
x

மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,

நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருபவர்களுடன் கூட்டணி என்பது எனது கருத்தோ, கட்சியின் கருத்தோ கிடையாது. இது மாவட்டச் செயலாளர்களின் கருத்து மட்டுமே.

யாருடனும் இதுவரை மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story