நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் நாளை முதல் விருப்ப மனு


நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் நாளை முதல் விருப்ப மனு
x

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட விரும்புவோா் நாளை முதல் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story