நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது


நாடாளுமன்ற தேர்தல்:  தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது
x
தினத்தந்தி 10 March 2024 10:03 AM IST (Updated: 10 March 2024 10:08 AM IST)
t-max-icont-min-icon

தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் கடந்த 1 -ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து 2 ஆயிரத்து 984 விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனு அளித்தவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் செய்கிறார்.

காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது . அப்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.

நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தி.மு.க. தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story