நாடாளுமன்ற தேர்தல்: விருப்ப மனு செய்தவர்களுடன் ஓ. பன்னீர் செல்வம் நேர்காணல்


நாடாளுமன்ற தேர்தல்: விருப்ப மனு செய்தவர்களுடன் ஓ. பன்னீர் செல்வம் நேர்காணல்
x
தினத்தந்தி 10 March 2024 4:21 PM GMT (Updated: 11 March 2024 1:18 AM GMT)

600- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்ததாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், முன்னால் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நாடாளுமன்ற தேர்தலில் களம்காண உள்ளனர். பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் உள்ள கூட்டரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் விருப்ப மனுவுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. விருப்ப மனுவை ஏராளமான ஆதரவாளர்கள் வாங்கி படிவங்களை நிரப்பி விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். 600- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்ததாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓ பன்னீர் செல்வம் அணியில் பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், தா்மர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் தங்கபாண்டியன், ஜயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி. பிரபாகர், சுப்பிரத்தினம் ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்த நேர்காணலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் அந்த தொகுதியில் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான நேர்காணல் குழுவினர் கேட்டறிந்தனர்.


Next Story