அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் - சி.வி.சண்முகம் விமர்சனம்


அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் - சி.வி.சண்முகம் விமர்சனம்
x

அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்சியினுடைய உறுப்பினர்களையும், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒரே குடும்பமாக நினைத்தார். அண்ணா அவர்கள் கட்சியை குடும்பமாக பார்த்தார். ஆனால் இன்றைக்கு திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம். திமுக என்றால் கோபாலபுரம் என்று ஆகிவிட்டது.

தேர்தல் நேரத்தில் பெண்களை குறிவைத்து, பெண்களுடைய வாக்குகளை குறிவைத்து பல கவர்ச்சிகரமான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசினார். ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டரை வருடத்தில் என்ன மாற்றங்களை இந்த முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார்.

விலைவாசி உயர்த்தப்பட்டதன் மூலமாக அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி கூடுதலாக வருமானம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி டாஸ்மாக்கில் இருந்து மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், பால் கட்டணம், பேருந்து கட்டணம், நில மதிப்பு, பத்திரப்பதிவு கட்டணம், பள்ளிகளில் மாணவர்களின் படிப்புக்கான கட்டணம் போன்றவை உயர்ந்து விட்டது என்று கூறினார்.


Next Story