ரெயில்வே கேண்டீனில் வாங்கிய இட்லியில் கிடந்த கரப்பான்பூச்சி - வீடியோ வெளியிட்டு பயணி புகார்


ரெயில்வே கேண்டீனில் வாங்கிய இட்லியில் கிடந்த கரப்பான்பூச்சி - வீடியோ வெளியிட்டு பயணி புகார்
x

இட்லியில் கரப்பான்பூச்சி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த பயணி, ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் மேலாளரிடம் புகார் தெரிவித்தார்.

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று போபால் பகுதியை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீனில் பயணி ஒருவர், தலா 50 ரூபாய் கொடுத்து 3 இட்லி பொட்டலங்களை வாங்கியுள்ளார்.

இதில் தனது மகளுக்கு வாங்கப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது, இட்லியில் கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் மேலாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



1 More update

Next Story