பயணிகள் நிழற்குடையில் மோதிய அரசு பஸ்


பயணிகள் நிழற்குடையில் மோதிய அரசு பஸ்
x

பயணிகள் நிழற்குடையில் மோதிய அரசு பஸ் -கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம்

ராமநாதபுரம்

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கிராமத்தில் இருந்து சாயல்குடி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அரசு பஸ்சை சாயல்குடி பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர்(வயது 45) ஓட்டினார். கன்னிகாபுரி கிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தெற்கு மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த பெரிடின்(30), இவரது சகோதரர் கேலிகாஸ் (26) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் கன்னிகாபுரி கிராம சாலையின் வளைவில் திரும்பினர். இதை பார்த்த டிரைவர் ராமர் அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ்சை வேறு பக்கம் திருப்ப முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மீது பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் டிைரவர் ராமருக்கு தலை மற்றும் 2 கால்களில் பலத்தக்காயம் ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த கர்ப்பிணி பிரின்ஸ்(22), மாரியம்மாள்(47), முனியாண்டி, சாயல்குடியைச் சேர்ந்த ராமர்(47), முத்துமாரி(35), மூக்கையூர் கிராமத்தை சேர்ந்த ஜான்சி(45), இருசக்கர வாகனத்தில் வந்த பெரிடின் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story