பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம்


பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம்
x

பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

சென்னை,

பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவை (www.passportindia.gov.in) என்ற முகவரி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி முதல் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த காலகட்டத்தில் எந்த சேவையும் கிடைக்காது. எனவே விண்ணப்பதாரர்கள் முன்அனுமதி மற்றும் விளக்கங்களுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு இணையதள முகவரியை பார்வையிடுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story