திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம்


திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம்
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 4:40 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகராட்சியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் நகராட்சி திறந்த வெளியில் அசுத்தம் செய்தல் இல்லாத நகராட்சியாக பிரகடணம் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், நகராட்சி பகுதியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தலோ, சிறுநீர் கழித்தலோ, எச்சில் துப்புதலோ கூடாது.

அவ்வாறு எவரேனும் திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் அசுத்தம் செய்தாலோ, சிறுநீர் கழித்தாலோ அல்லது எச்சில் துப்புவது கண்டறியப்பட்டாலோ பொது சுகாதார சட்ட விதிகளின் கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதுடன், போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் திறந்த வெளியில் அசுத்தம் செய்யாமல், சிறுநீர் கழிக்காமல், எச்சில் துப்பாமல் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

1 More update

Next Story