பழக்கழிவுகளை கொட்ட முயன்றவருக்கு அபராதம்


பழக்கழிவுகளை கொட்ட முயன்றவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 April 2023 12:07 AM IST (Updated: 13 April 2023 1:01 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் காப்புக்காடு அருகே பழக்கழிவுகளை கொட்ட முயன்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி

தர்மபுரி வனக்கோட்டம் தொப்பூர் காப்புக்காடு பகுதியில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவுப்படி வனச்சரக அலுவலர் அருண் மற்றும் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொப்பூர் காப்புக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு வேனில் இருந்து பழ கழிவுகளை ஒருவர் கொட்ட முயன்றார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நித்திஷ் என்பது தெரியவந்தது. அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story