சேலத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி சேலத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேசிகன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story