தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மித முதல் கனமழை பெய்தது.
நெல்லை,
சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாய பணிகளுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இருப்பினும், குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. சிக்கரசம்பாளையம், மாரனூர், அய்யன் சாலை, தொட்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரம் மழை நீடித்தது.