மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x

குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க வந்த கரூர் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

குடிநீர் குழாய் இணைப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் அருகே தில்லைநகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக அந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கரூர்-ராயனூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பாட்டிலில் பெட்ரோலுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story