சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் - மேயர் பிரியா
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மேயர் பிரியா ராஜன் கூறியதாவது:-
சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
சென்னையில் 1,300 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும். சரியாக பணியாற்றாத மழைநீர் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story