பஸ் இல்லாததால் மக்கள் போராட்டம்
பஸ் இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி
மணப்பாறை பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று சனிக்கிழமை என்பதால் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை சென்று விட்டு மக்கள் மீண்டும் ஊர் திரும்ப மணப்பாறை வந்தனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் பஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த ஆத்திரத்தில் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் மக்கள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலக அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக மாற்று பஸ் இயக்கப்பட்டதை அடுத்து மக்கள் பஸ்சில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.
=============
Related Tags :
Next Story