விழுப்புரத்தில் பா ம க வினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் பா ம க வினர் ஆர்ப்பாட்டம்
x

போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக்கோரி விழுப்புரத்தில் பா ம க வினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி வரவேற்றார். மத்திய அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன், வடக்கு மாவட்ட செயலாளரும், மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, விழுப்புரம் நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான இளந்திரையன், நகர தலைவர்கள் பெருமாள், செல்வம், நகர செயலாளர் போஜராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயலு, சம்பத், மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், முன்னாள் மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், மணிகண்டன், குழந்தைவேல், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் பாவாடைராயன் நன்றி கூறினார்.


Next Story