விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்


விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்
x

தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை நோக்கி வருவதால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையின் காரணமாக சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது விடுமுறை இன்றுடன் முடிவடைந்த நிலையில், மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறனர். ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் சென்னைக்குள் நுழைவதால், சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story