பழுதடைந்த மின்கம்பங்களால் பொதுமக்கள் அவதி


பழுதடைந்த மின்கம்பங்களால் பொதுமக்கள் அவதி
x

பழுதடைந்த மின்கம்பங்களால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

தோகைமலை ஒன்றியம், கூடலூர் குளத்துப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மூட்டக்காம்பட்டி மின் அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராமான மின்கம்பங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டன. இந்தநிலையில் கூடலூர் பகுதிக்கு செல்லும் 10-க்கும் மேற்ப்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் மின்வாரிய ஊழியர்கள் அதில் ஏறி சரி செய்ய முடியவில்லை. மேலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story