பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி


பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
x

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக நகர தெருக்களிலும், கட்டிடங்களிலும் உலா வருகின்றன. அப்படி வருகின்ற குரங்குகள் சாலையில் தின்பண்டங்களுடன் நடந்து செல்லும் சிறுவர்களிடமிருந்து அந்த தின்பண்டங்களை பறித்து கொண்டு செல்கின்றன.

மேலும் கையில் எதையாவது கொண்டு சென்றாலும் அவற்றை பறித்து கொண்டு ஓடி விடுகின்றன. வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள தின்பண்டங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த குரங்குகளை பிடித்து எங்காவது தூரத்தில் உள்ள காட்டில் விட்டுவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story