சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதி


சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதி
x

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் முகாமுக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமருவதற்கு போதிய இருக்கை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பலரும் முகாம் நடைபெற்ற ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்ற டாக்டர்கள் மதியம் 1 மணிக்கு சென்று விட்டதால் மாற்றுத்திறனாளி நோயாளிகள் சான்றிதழ் பெற முடியாமல் அவதியடைந்தனர்.

இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தில் போதிய இடவசதி, குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story