கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம்


கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை சாா்பில் கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

காவல்துறை சாா்பில் மக்கள் குறை தீர்வு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுமக்கள் அளித்த புகார் மனு மீது போலீஸ் நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 90 பேரின் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 78 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 12 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதிதாக 31 பேர் மனு கொடுத்தனர். இந்த மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து கோட்ட துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story