ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்


ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்
x

ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் பிடித்துள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணியானது கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைத்து கொண்டதால், மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது மேலும் 4 வாக்கு சாவடிகளில் 100 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது, என்றார். இப்பணிகளில் சிறப்பான முறையில் செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்களின் பணியினை பாராட்டி கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இப்பணியில் தொய்வாக உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story