பெரியார் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


பெரியார் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:53 AM GMT (Updated: 17 Sep 2023 6:54 AM GMT)

இந்த ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படம் மற்றும் அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்)தளத்தில், "அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!. மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!. பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story