கட்டடங்களுக்கு அனுமதி; பழனி கோவில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் நோட்டீஸ்


கட்டடங்களுக்கு அனுமதி; பழனி கோவில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் நோட்டீஸ்
x

பழனி கோவில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் சிவகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் ஆயிரக்கணக்கிலும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கிலும் வருகை தருகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

அந்த வகையில் பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை, பூங்கா சாலை, ரெயில் நிலைய சாலை உள்பட பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் கட்டியுள்ளது.

இந்த கட்டடங்களின் உறுதித்தன்மையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து பழனி கோட்டாட்சியரிடம் சான்று பெற வேண்டும். ஆனால் கோவில் நிர்வாகம் கோட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பழனி கோட்டாட்சியர் சிவகுமார், கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பழனி கோவிலுக்குச் சொந்த கட்டடங்களுக்கு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம், கட்டட வரைபடம், சொத்துவரி ஆகிய சான்றுகள் பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story