அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி


அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி
x

அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், அப்பிப்பாளையம் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு அப்பிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாவட்டம் முழுவதும் கழிவறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பெண் குழந்தைகள் அனைவரும் கல்லூரி வரை படிக்க வேண்டும்.

ஒற்றுமை, சுத்தம், சுகாதாரம், கல்வி இவை வந்தாலே ஒரு ஊர் சிறந்த ஊராக மாறிவிடும். மேலும் நூலகங்களை பயன்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பிப்பாளையம் கிராமத்திற்கு அத்தியாவசிய தேவையான சமுதாயக்கூடம் அமைப்பதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அடுத்ததாக தனியாக ரேஷன் கடை கேட்டிருக்கிறீர்கள் அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின் திறன் அதிகரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள் அது குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சரோஜா, வார்டு உறுப்பினர்கள் காளியப்பன், ஆர்த்தி, சித்திரா, நிவேதா, மோகனா, சுப்புராயன், சசிக்குமார், ஜானகி, ஊராட்சி செயலர் ஈஸ்வரன் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story