காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது


காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
x

காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த திருமங்கலம் ஊராட்சியில் கள்ள சந்தையில் மர்மநபர்கள் மது விற்பதாக சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏரிக்கரை அருகே ஒரு நபர் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் திருமங்கலம் ஊராட்சி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 42) என்பதும் அவரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story