ஸ்ரீபெரும்புதூரில் பெருமாள் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


ஸ்ரீபெரும்புதூரில் பெருமாள் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

ஸ்ரீபெரும்புதூரில் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்து பெற்ற பழமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஸ்ரீராமானுஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆதி கேசவ பெருமாளுக்கு 10-நாள் பிரமோற்சவமும், ஸ்ரீராமானுஜருக்கு 10-நாள் அவதார திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஸ்ரீராமானுஜர் 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் யானை வாகனம், குதிரை வாகனம், சூரிய பிரபை வாகனம் உள்ளிட்ட வாகனகளில் ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் 9-வது நாள் நேற்று காலை திருதேர்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில் காந்தி சாலை, திருவள்ளூர் செல்லும் சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக ஸ்ரீராமானுஜர் தேரில் வளம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரமோற்சவ விழா மே 4-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை 10நாள் நடைபெற உள்ளது. பிரமோச்சவத்தின் 7-ம் நாள் 10-ந் தேதி காலை திருதேர் விழா வெகு விமர்சியாக நடைபெறும்.


Next Story