பெருமாள் கோவில் தேரோட்டம்


பெருமாள் கோவில் தேரோட்டம்
x

உளுந்தூர்பேட்டை அருகே பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story