பள்ளிபாளையம் அருகேகுடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


பள்ளிபாளையம் அருகேகுடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Aug 2023 7:00 PM GMT (Updated: 21 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சாயபட்டறை

பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு கலெக்டரிடம் புகார் புனு கொடுத்தனர். அதில் வண்ணாம்பாறை ஆஞ்சநேயர் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே தனியார் நூற்பாலைக்கு சொந்தமான சாயப்பட்டறை இயங்கி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த கழிவுநீர் குடிநீரிலும் கலக்கிறது.

அதன் காரணமாக குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தோம். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விட்டு, இனி சாயப்பட்டறை இயங்காது என தெரிவித்து சென்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து சாயப்பட்டறை இயங்கி வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாய தொழிற்சாலையின் உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அந்த சாயத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வீட்டுமனை பட்டா

இதேபோல் திருச்செங்கோடு தாலுகா உஞ்சனை ஊராட்சி குட்டிக்காபாளையத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், எனவே அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

அதேபோல் ராசிபுரம் தாலுகா வடுகம் கிராமத்தில் வி.பி.கே. நகரில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story