நாமக்கல்குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டன


நாமக்கல்குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 11 April 2023 12:30 AM IST (Updated: 11 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையர் (கலால்) செல்வி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story