விளை நிலத்தில் நடுப்பட்ட மின்கம்பங்களை அகற்றக்கோரி மூதாட்டி மனு
விளை நிலத்தில் நடுப்பட்ட மின்கம்பங்களை அகற்றக்கோரி மூதாட்டி மனு அளித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆண்டிமடம் சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அலமேலு ஒரு மனு அளித்தார். அதில், எங்களது நிலத்தில் முந்திரி விவசாயம் செய்து வருகிறோம். ஆண்டிமடம் மின் வாரியத்தினர் எங்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், அப்பகுதியில் மின்கம்பத்தை நட்டுள்ளனர். மேலும் முந்திரி மரங்களையும் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். என்னுடைய வாழ்வாதாரமே இந்த முந்திரி தோப்பை நம்பிதான் உள்ளது. எனவே தேவையில்லாமல் எனது நிலத்தில் அமைத்துள்ள மின்கம்பங்களை அகற்றி, எனது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் அவர் கண்ணீருடன், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியவாறே சென்றார்.
Related Tags :
Next Story