கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கலிவரதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஏழுமலை, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன், சந்திரசேகரன், விஸ்வநாதன், கணேசன், தணிகைவேல், பாலு, ரமேஷ், ஜெயராமன், லட்சுமணன், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்டமங்கலம் ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சி ப.வில்லியனூர் எம்.ஜி.ஆர். நகரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் இடத்தை தடையின்மை சான்று பெற்று 84 குடும்பங்களுக்கு மனைப்பட்டா கிடைக்க தனி தாசில்தார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story