மனு கொடுக்கும் போராட்டம்


மனு கொடுக்கும் போராட்டம்
x

சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு தூய்மை காவலர், துப்பரவு பணியாளர், உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினாா். மாவட்ட குழு உறுப்பினர் முத்தையா முன்னிலை வகித்தார். தூய்மை காவலர் பணியை நிரந்தரமாக்க வேண்டும். வீடற்ற துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தூய்மை காவலர், துப்புரவு பணியாளர், ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.


1 More update

Next Story