தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு


தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு
x

தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம் நேற்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுவில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராக உள்ள லதா என்பவரின் செயல்பாடுகள் நிர்வாகத்தில் சரியான முறையில் இல்லை. அவரது கணவர் அரசுக்கு சொந்தமான வாகனத்திற்கு தனது பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புவதில் முறைகேடு நடைபெறுகிறது. ஒன்றியக்குழு கூட்டத்தில் பொது நிதி செலவு கணக்கில் முறைேகடுகள் நடைபெறுகிறது. இது குறித்து கேட்கும் கவுன்சிலர்களை, அரசு அதிகாரிகளை அடியாட்களை வைத்து மிரட்டி கூட்டத்தை நடத்துகிறார். அரசு வாகனத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார். தற்போது ஒன்றியக்குழு தலைவராக இருக்கும் லதா தொடர்ந்து நீடித்தால் அவருடைய அதிகாரத்தை அவரது கணவர் கையில் எடுத்துக் கொண்டு தவறாக பயன்படுத்தி அரசு பணத்தை முறையற்ற வழியில் ஊழல் செய்து விடுவார். எனவே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த காரணத்தால் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story