நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு


நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு
x

நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், அச்சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேற்று மாலை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், இந்திய மாணவர் சங்கம் சார்பாக கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்குட்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் உட்கட்ட அமைப்பு சரியில்லாமல் இருப்பதாலும், போதிய பணியாளர்கள் இல்லாததாலும் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனை தட்டிக்கேட்ட 2 மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கவும், விடுதியில் உட்கட்டமைப்பு சரி செய்யவும், விடுதியில் காலி பணியிடங்களை நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் கற்பகம் நீக்கப்பட்ட 2 மாணவர்களையும் மீண்டும் விடுதியில் சேர்க்கப்படுவார்கள். இனி உணவு தரமாக வழங்கப்படும். அவ்வப்போது நானே வந்து விடுதியை ஆய்வு செய்கிறேன், என்று கூறியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story