வள்ளியூர் யூனியனில் இலவச வீடு வழங்கும் திட்ட பயனாளிகளிடம் மனு சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்


வள்ளியூர் யூனியனில்  இலவச வீடு வழங்கும் திட்ட பயனாளிகளிடம் மனு  சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்
x

வள்ளியூர் யூனியனில் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகளிடம் இருந்து சபாநாயகர் அப்பாவு மனுக்களை பெற்றுக் கொண்டார்

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியனில் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகளிடம் இருந்து சபாநாயகர் அப்பாவு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வீடு வழங்கும் திட்டம்

வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்துகளில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடு மற்றும் பட்டா வழங்கும் திட்டத்திற்கான மனுக்களை பெறும் நிகழ்ச்சி வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் வரவேற்றார்.

சபாநாயகர் அப்பாவு

ஏழை, எளிய மக்களிடம் இருந்து இலவச வீடு மற்றும் பட்டா பெறுவதற்கான மனுக்களை தமிழக சபாநாயகரும், ராதாபுரம் எம்.எல்.ஏ.வுமான அப்பாவு பெற்றுக்கொண்டர். அப்போது அவர் பேசியதாவது:-

வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட 18 பஞ்சாயத்துகளில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், வீடு கட்ட இடமிருந்தும் வீடு கட்ட முடியாத தகுதியுடையவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும். இதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பஞ்சாயத்து வாரியாக பிரிக்கப்பட்டு தகுதியுடையவர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு மாதங்களில் அதற்கான ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு நிதியிலிருந்தும் தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்தும் சிறப்பு நிதி பெற்று திட்டம் செயல்படுத்தப்படும். வள்ளியூர் மற்றும் ராதாபுரம் யூனியனில் உள்ள கிராம மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், லிங்கசாந்தி, வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

ராதாபுரம்

ராதாபுரம் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான தொடக்க விழா ராதாபுரம் பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், யூனியன் தலைவர்கள் சேவியர் ராஜா (வள்ளியூர்), சவுமியா (ராதாபுரம்), ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி மற்றும் ராதாபுரம் யூனியன் கவுன்சிலர்கள், ராதாபுரம் தொகுதி பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story