பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - 15 பேர் கைது


பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - 15 பேர் கைது
x

பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

கடந்த வியாழக்கிழமை கோவையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்தது.

கோவையில் மட்டும் நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் என 8 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மொத்தமாக 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக, கோவையில் 2 பேர், ஈரோட்டில் 4 பேர், மேலும் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரியில் 2 நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வரை இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கைது எண்ணிக்கை உயரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story