பிக்பாக்கெட் அடித்தவர் கைது


பிக்பாக்கெட் அடித்தவர் கைது
x

பிக்பாக்கெட் அடித்தவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் பஸ் நிலையத்தில் சென்னையை சேர்ந்த முருகன்(வயது 67) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த முருகேசன்(55) என்பவர் முருகனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.3,000-ஐ பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனை அடுத்து அவரை பிடித்த முருகன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகுமார் வழக்குப்பதிவு செய்து பிக்பாக்கெட் அடித்த முருகேசனை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.3,000-ஐ பறிமுதல் செய்தார்.


Next Story