போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என்று கூறி அனைத்து போலீசாரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இளங்கோவன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், காவல் நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story