தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது - பிரதமர் மோடி


தினத்தந்தி 8 April 2023 2:47 PM IST (Updated: 8 April 2023 7:53 PM IST)
t-max-icont-min-icon

நான் தமிழ் மொழியை நேசிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

சென்னை,


Live Updates

  • தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது - பிரதமர் மோடி
    8 April 2023 7:50 PM IST

    தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது - பிரதமர் மோடி

    சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

    தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையமும் தமிழ்நாடு தான். தமிழ்நாடு கலாசார மையமாக மதுரை உள்ளது

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடும் உதவுகிறது. தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியா வளரும். தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது.

    டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். மலிவு விலையில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தமிழ்நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும். தற்போது துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை பயன்பெறும்’ என்றார்.

  • புதிய தொடக்கம் - பிரதமர் மோடி
    8 April 2023 7:29 PM IST

    புதிய தொடக்கம் - பிரதமர் மோடி

    சென்னை பல்லாவரத்தில் நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் "வணக்கம் தமிழ்நாடு" என்று தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மகளுக்கு பயன் தர உள்ளன. தமிழ் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும்’ என்றார்.

  • தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!
    8 April 2023 6:53 PM IST

    தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

    சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்,

    தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  • மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    8 April 2023 6:48 PM IST

    மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ரெயில்வே, விமானப்போக்குவரத்து துறை, சாலை போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

    இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டிற்கு போதிய ரெயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. சென்னை-மதுரை இடையே வந்தேபாரத் ரெயில் சேவை துவங்கப்பட வேண்டும்.

    கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய், மதுரையில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    மெட்ரோ ரெயில் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்’ என்றார்.

  • பிரதமர் மோடி உலகத்தை ஆள்கிறார் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
    8 April 2023 6:28 PM IST

    பிரதமர் மோடி உலகத்தை ஆள்கிறார் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

    சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ரெயில்வே, விமானப்போக்குவரத்து, சாலை போக்குவரத்து துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் துவக்க உரையாற்றி பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகன் கூறுகையில்,

    தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடி மிகப்பெரிய பாசத்தையும், அன்பையும் வைத்துள்ளார். ஜி20 மாநாடு நடத்தி ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்று உலக தலைவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடி உலகத்தை ஆளுவது மட்டுமல்லாமல் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது பெரிய பொருளாதார நாடாக நாம் முன்னேறியுள்ளோம்’ என்றார்.

  • 8 April 2023 6:12 PM IST

    பிரதமர் மோடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரம் வருகை

    பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானம் வந்தடைந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானம் வந்தடைந்தார்.

  • 8 April 2023 5:52 PM IST

    சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி...!

    ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி காரில் பல்லாவரம் நோக்கி புறப்பட்டார். பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி காரில் புறப்பட்டார்

  • 8 April 2023 5:33 PM IST

    சென்னை விமான நிலையம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் நோக்கி  புறப்பட்டார்

  • 8 April 2023 5:30 PM IST

    பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணிக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி

    சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் நோக்கி காரில் சென்றுகொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும் கவர்னர் ஆர்.என்.ரவியும் ஒரே காரில் பயணிக்கின்றனர்.

  • 8 April 2023 5:28 PM IST

    விவேகானந்தர் இல்லத்தில் இருந்து ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி

    சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் நோக்கி புறப்பட்டார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமானம் நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து காரில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 


Next Story