ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...!


ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...!
x
தினத்தந்தி 9 April 2023 10:47 AM IST (Updated: 9 April 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

நீலகிரி

Live Updates

  • முதுமலை பயணத்தை முடித்துக்கொண்டு மைசூரு புறப்பட்டார் பிரதமர் மோடி...!
    9 April 2023 12:04 PM IST

    முதுமலை பயணத்தை முடித்துக்கொண்டு மைசூரு புறப்பட்டார் பிரதமர் மோடி...!

    முதுமலை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி மைசூரு புறப்பட்டார். தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து சாலை மார்க்கமாக காரில் மசனக்குடி சென்ற பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூரு புறப்பட்டு சென்றார்.

  • மசனக்குடியில் பொதுமக்களை சந்தித்த பிரதமர் மோடி...!
    9 April 2023 11:56 AM IST

    மசனக்குடியில் பொதுமக்களை சந்தித்த பிரதமர் மோடி...!

    தெப்பக்காடு முகாமில் இருந்து மீண்டும் மைசூரு செல்லும் வழியில் மசனக்குடியில் பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். மசனக்குடியில் காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி சாலையின் இரு புறமும் இருந்த பொதுமக்கள், பாஜகவினரை பார்த்து கையசைத்தார்.

  • பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
    9 April 2023 11:27 AM IST

    பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

    ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

  • யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி
    9 April 2023 11:07 AM IST

    யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி

    முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்பு உணவு அளித்தார்.

  • பிரதமர் மோடி முதுமலை வருகை...!
    9 April 2023 10:48 AM IST

    பிரதமர் மோடி முதுமலை வருகை...!

    பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தில் இருந்து சாலை மார்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்தடைந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

  • 9 April 2023 10:47 AM IST

    பிரதமர் மோடி நேற்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு கர்நாடகாவின் மைசூரு சென்றார். இரவு மைசூருவில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பார்வையிட்டார்.


Next Story