பிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


பிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Jan 2024 10:30 AM IST (Updated: 19 Jan 2024 1:32 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதுதவிர அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்காக நாளை ஸ்ரீரங்கம்,ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார்.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்டக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story