சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்...! சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை- என்ன காரணம்...?
தமிழர்களே இல்லாத சி.எஸ்.கே அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் தற்போது விளையாட்டுத்துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் பேசுகையில்,
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை எனவும் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர். எனவே தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சிஎஸ்கே அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story