67 தலைமை காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
67 தலைமை காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழக காவல்துறையில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களில் முதல்பிரிவினருக்கு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து 2-ம் பிரிவினை சேர்ந்த தலைமை காவலர்களில் 67 பேருக்கு தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த அருணகிரிநாதன், சுபாஷ் ஸ்ரீனிவாசகன், அறிஞர்துரை, ஹெலன், குருவம்மாள், பாதம்பிரியாள், முத்துமாரி உள்பட 67 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.