கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - காப்பாற்றிய காவலர், மீனவருக்கு பொதுமக்கள் பாராட்டு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி காவலர் மற்றும் மீனவரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் முதலை மேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி அஞ்சலை, குடும்ப பிரச்சினை காரணமாக சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆற்றில் குதித்த மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்துக் கொண்டு இருந்தார்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர் மற்றும் ஆயுதப்படை காவலர் தனஞ்ஜெயன் இருவரும் பார்த்தனர். உடனே துரிதமாக செயல்பட்டு இருவரும் மூதாட்டியை காப்பாற்றி படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். காப்பாற்றப்பட்ட மூதாட்டி அவரது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியை காப்பாற்றிய காவலர் மற்றும் மீனவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story