போலீசார்- வணிகர்கள் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறையில் போலீசார்- வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் போலீசார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வம் முன்னிலை வகித்தார். சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைசி 3 நாட்கள் மட்டும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்லவும், கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்து தரவும், ஒவ்வொரு கடையிலும் ரோடு பகுதி பார்வை தெரிய கேமரா பொறுத்த வேண்டும் என்று போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் வணிகர்கள் சார்பில் 6 கேமராக்கள் அமைத்து தர முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story