வட மாநில தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. குறை கேட்பு


வட மாநில தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. குறை கேட்பு
x

பரமக்குடி அருகே வட மாநில தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. குறை கேட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி இறங்குதளம், கட்டுமான தொழில், உணவகங்கள், செங்கல் சூளைகள் உட்பட பல்வேறு வேலைகளில் 2,500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை மற்றும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் இருப்பிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.


Related Tags :
Next Story