பள்ளிகளின் அருகே பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை


பள்ளிகளின் அருகே பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை
x

வேலூரில் பள்ளிகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வேலூர்

வேலூரில் பள்ளிகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

போதை பொருட்கள்

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் பள்ளியின் அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காவல் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் மன்றம் மூலம் போதை பொருட்கள் விற்பனையை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

பாகாயம், அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 15 பள்ளிகள், 5 கல்லூரிகளில் காவல்மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவல்மன்றம்

இந்தமன்றத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், போலீஸ்காரர், மாணவர்கள் ஆகியோர் இருப்பார்கள். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காவல்மன்றத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த குழுவில் போதை பொருட்கள் தொடர்பாக வரும் தகவல்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கையை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்கொண்டு வருகிறார்.

பாகாயம், அரியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரியின் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பள்ளியின் ஆசிரியர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

மேலும் வாட்ஸ்அப் குழுவில் மாணவர்கள் தெரிவிக்கும் புகார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Related Tags :
Next Story