மாநகரில் 11 ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை


மாநகரில் 11 ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
x

மாநகரில் 11 ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திருச்சி

அதிரடி சோதனை

திருச்சி மாநரில் உள்ள கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், பொன்மலை, அரியமங்கலம், கோட்டை, காந்திமார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர், அரியமங்கலம் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் பெருங்குற்றங்களில் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளில் நேற்று போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் மேற்கொண்ட இந்த சோதனையின் போது, சம்பந்தப்பட்ட வருவாய் கிராம நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில் ஏதேனும் ஆயுதங்கள், வேறு பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரங்களை போலீசார் உடனடியாக தெரிவிக்கவில்லை.

கமிஷனர் எச்சரிக்கை

திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணி காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி, குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியப்பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story