ரைஸ்மில்லில் போலீசார் திடீர் சோதனை


ரைஸ்மில்லில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 9:49 AM GMT)

எப்போதும் வென்றானில் உள்ள ரைஸ்மில்லில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி

மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில் விருதுநகர் சரக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் மதுரை பைபாஸ் ரோட்டில் எப்போதும்வென்றானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அங்கீகாரம் பெற்ற ரைஸ் மில்லில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எந்தவித முறைகேடும் இல்லாமல் அரிசி வாணிப கழகத்துக்கு வழங்கப்படுகிறதா?என்பதை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரைஸ் மில் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினர்


Next Story